இலங்கை

ஆபிரிக்க பன்றிக்காய்ச்சலினால் இலங்கையில் நூறு பன்றிகள் உயிரிழப்பு!

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் இலங்கையின் ஒட்டுமொத்த காட்டுப்பன்றி இனமும் அழிந்துபோகும் அபாயத்தை எதிர்கொள்கிறது,

ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் காரணமாக நாட்டில் சுமார் நூறு பன்றிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யால, வில்பத்து வனப்பகுதிகளிலும் கம்பஹா, மீரிகம, பேராதனை மற்றும் இரத்தினபுரி போன்ற இடங்களிலும் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தாரக பிரசாத் தெரிவித்துள்ளார்.

தற்போது காட்டுப் பன்றிகள் மத்தியில் இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது.

இதன் தாக்கம் நாட்டில் உள்ள அனைத்து காட்டுப் பன்றிகளையும் பாதிக்கும் நிலை காணப்படுவதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தாரக பிரசாத் தெரிவித்துள்ளார்

ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட சில நோய்த்தாக்கம் காரணமாக நாட்டில் பன்றி இறைச்சி விற்பனையை தடை செய்வதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் கடந்த ஒக்டோபர் மாதம் நடவடிக்கை எடுத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டது.

மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிகளவான பண்ணைகளில் இந்த நோய் பரவியிருந்த நிலையில், உயிரிழந்த பன்றிகளின் உடல்களை அழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

(Visited 1 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்