இலங்கை செய்தி

முல்லைத்தீவில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் ஒருவர் மரணம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வுக்கு உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர் குழுவே இந்த விபத்தினை சந்தித்துள்ளது

கிளிநொச்சி தர்மபுரம் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் உழவியந்திரம் ஒன்றில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை வேகமாக சென்ற உழவியந்திரம் தேராவில் வளைவு பகுதியில் திருப்ப முற்பட்டபோது பெட்டி கழன்று தடம் புரண்டுள்ளது

குறித்த விபத்தில் உழவனூர் பகுதியை சேர்ந்த 16 அகவையுடைய ர.மிதுசிகன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

உயிரிழந்த இளைஞனின் உடலம் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக புதுக்குடியிருப்பு போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

(Visited 20 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை