நியூயார்க்கில் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணம்
நியூயார்க்கில் உள்ள நயாகரா கவுண்டியில் ஸ்கை டைவிங்கிற்கு பயன்படுத்தப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கிள் எஞ்சின் செஸ்னா 208 பி, ஸ்கை டைவிங்கிற்கு பயன்படுத்தப்பட்ட விமானம், நியூயார்க்கின் யங்ஸ்டவுனுக்கு அருகிலுள்ள லேக் ரோடு அருகே விபத்துக்குள்ளானது என்று ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன்(FAA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Skydive the Falls ஸ்கைடைவிங் சென்டரில் இருந்து வந்த விமானம் அனைத்து டைவர்களையும் விடுவித்துவிட்டு தரையிறங்கச் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.
FAA இன் செய்தித் தொடர்பாளர், விமானத்தில் இருந்த ஒரே நபர், விபத்திற்கு முன் பாராசூட் நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்று தெரிவித்தார்.
இருப்பினும், விபத்திற்கு முன்னர் எத்தனை டைவர்ஸ் விமானத்தில் இருந்தனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று நயாகரா கவுண்டி ஷெரிப் மைக்கேல் ஃபிலிசெட்டி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.