உலகம் செய்தி

அமெரிக்காவில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணம்

அமெரிக்காவின் டென்னசி(Tennessee) மாநிலத்தின் நாஷ்வில்லுக்கு(Nashville) கிழக்கே ஒரு மருத்துவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஒரு பணியாளர் உயிரிழந்துள்ளார் மற்றும் இரண்டு பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

வாட்டர்பில்ட் லைப்ஃப்ளைட்(Waterbilt LifeFlight) ஹெலிகாப்டர் நாஷ்வில்லுக்கு கிழக்கே லெபனான்(Lebanon) மற்றும் கல்லட்டினுக்கு(Gallatin) இடையில் உள்ள ஒரு வயலில் விபத்துக்குள்ளானது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்த இரண்டு பணியாளர்களும் நாஷ்வில்லில் உள்ள வாட்டர்பில்ட்(Waterbilt) பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான கண்காணிப்பு வலைத்தளங்களான FlightAware மற்றும் Flightradar24 படி, ஹெலிகாப்டர் அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து புறப்பட்டு எட்டு நிமிடங்களில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

(Visited 2 times, 2 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!