கலிபோர்னியாவில் கருத்தரிப்பு மருத்துவமனை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலி

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள பாம் ஸ்பிரிங்ஸ் நகரில் கருத்தரிப்பு நிலையம் ஒன்றுக்கு அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார்.
சனிக்கிழமை (மே 17) நடந்த இத்தாக்குதலில் குறைந்தது நால்வர் காயமுற்றனர். இந்தத் தாக்குதல், வேண்டுமேன்ற நடத்தப்பட்ட பயங்கரவாதச் செயல் என்று அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (FBI) வகைப்படுத்தியுள்ளது.
இதுகுறித்த விசாரணையில் அதிகாரிகள் ஒருவரை சந்தேக நபராகக் கருத்தில்கொண்டு செயல்படுவதாகவும் சந்தேக நபர் யாரும் தேடப்படவில்லை என்றும் அகில் டேவிஸ் எனும் எஃப்பிஐ அதிகாரி தெரிவித்தார்.
அமெரிக்க இனப்பெருக்க நிலையங்கள் அமைப்பு (ARC) நடத்தும் மருந்தகத்துக்கு வெளியே நேர்ந்த வெடிப்பில் வாகனம் ஒன்று சுக்குநூறானது. அதன் அருகே இருந்த நபர் ஒருவர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அந்த வெடிகுண்டு, சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (மே 18) அதிகாலை இரண்டு மணிக்கு வெடித்தது. அந்த குண்டு, மருந்தகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரினுள் அல்லது அந்த காருக்கு அருகே இருந்திருக்கும் என்று பாம் ஸ்பிரிங்ஸ் மேயர் ரான் டிஹார்ட்ட தெரிவித்தார்.