செய்தி

இலங்கையில் கோர விபத்தில் சிக்கிய பேருந்து – ஒருவர் பலி – 37 பேர் காயம்

நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்திற்கு வழிபாடு செய்ய வந்த 38 பக்தர்களுடன் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சாரதி உட்பட 37 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேராதனை யஹலதன்ன பிரதேசத்தில் கொப்பேகடுவ சந்தியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பக்தர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து நெல்லிகலையில் இருந்து புடலுஓயா நோக்கி பயணித்த நிலையில் பேருந்தின் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 15 மீற்றர் சாய்வில் சறுக்கி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சாரதி உட்பட 38 பேர் காயமடைந்துள்ளதுடன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹல்பொல, புடலுஓயா பகுதியைச் சேர்ந்த 79 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!