”கத்தோலிக்கர்களுக்கு ஒரு துணை போதும்” – வத்திக்கான் வலியுறுத்தல்!
கத்தோலிக்கர்களுக்கு ஒரு துணை போதும் என்று வத்திக்கான் நேற்று அறிவித்துள்ளது.
போப் லியோவால் அங்கீகரிக்கப்பட்ட புதிய ஆணையில், உலகின் 1.4 பில்லியன் கத்தோலிக்கர்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு துணையை மணக்க வேண்டும் என்றும் பல பாலியல் உறவுகளை வைத்திருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சபை உறுப்பினர்கள் உட்பட ஆப்பிரிக்காவில் பலதார மண நடைமுறையை விமர்சித்த வத்திக்கான், திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான வாழ்நாள் உறுதிப்பாடு என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளது.
“ஒவ்வொரு உண்மையான திருமணமும் இரண்டு நபர்களைக் கொண்ட ஒரு ஒற்றுமை, இது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு நெருக்கமான மற்றும் முழுமையான உறவைக் கோருகிறது” என்று குறித்த ஆணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் குறித்த திருச்சபையின் போதனைகளை எவ்வாறு சிறப்பாக அமல்படுத்துவது என்பது தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட விவாதங்களின் அடிப்படையில் வத்திகான் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதேவேளை இந்த ஆவணம் விவாகரத்தைப் பற்றி விவாதிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




