செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் சிறுவனின் உயிரை பறித்த One Chip Challenge

அமெரிக்காவில் 14 வயது சிறுவன் அதிக காரத்தை சாப்பிட்டதால் உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

Harris Wolobah என்ற சிறுவன் சமூக ஊடகத்தில் பிரபலமான ‘One Chip Challenge’ சவாலில் பங்கேற்றபோது காரமான மிளகு சிப்ஸைச் சாப்பிட்டார்.

சவாலில் Paqui என்ற நிறுவனத்தின் சிப்ஸைச் சாப்பிட வேண்டும். சிப்ஸில் காரமான Carolina Reaper, Naga Viper peppers ஆகிய மிளகு வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.

மிளகு வகைகளில் காணப்படும் capsaicin எனும் இரசாயனத்தை அதிகளவில் உட்கொண்ட பின் ஹாரிஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

அவரின் இதயம் வழக்கத்தை விட பெரிதாகக் காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சிப்ஸைச் சாப்பிட்ட மற்ற இளையர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கடைகளிலிருந்து Paqui சிப்ஸ் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி