வெனிசுவேலாவிலிருந்து எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை – அதிரடியாக உயர்ந்தது எண்ணெய் விலை

அமெரிக்காவின் Chevron நிறுவனம் வெனிசுவேலாவிலிருந்து கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
Brent ரகக் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 47 காசு உயர்ந்துள்ளது. இப்போது ஒரு பீப்பாயின் விலை 64.56 டொலராகும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் Chevron நிறுவனத்திற்குப் புதிய அதிகாரத்தைக் கொடுத்துள்ளது.
நிறுவனம் தன்னுடைய சொத்துக்களை வெனிசுவேலாவில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கோ நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்வதற்கோ அனுமதி இல்லை.
எனவே இப்போது மத்தியக் கிழக்கிலிருந்து வரும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன் இருந்த உரிமத்தை ஜனாதிபதி டிரம்ப் பெப்ரவரி 26ஆம் திகதி ரத்து செய்திருந்தார்.
(Visited 13 times, 1 visits today)