இலங்கையில் வீடுகளுக்கு வரும் அதிகாரிகள் : மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதில் அச்சம் தேவையில்லை என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சனத்தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு சில வீடுகள் தகவல் வழங்காமல் இருப்பதாக செய்திகள் வந்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி அனோஜா செனவிரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் டிசம்பர் 23 ஆம் தேதி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்த வருடத்திற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)