ருவாண்டாவில் Marburg தடுப்பூசிக்கான ஆய்வை ஆரம்பித்துள்ள அதிகாரிகள்!
ருவாண்டா சுகாதார அதிகாரிகள் மார்பர்க் ரத்தக்கசிவு காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி ஆய்வைத் தொடங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் இந்த வைரஸ் காரணமாக இதுவரை12 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட சபின் தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து 700 டோஸ் தடுப்பூசியைப் பெற்ற ருவாண்டா, சுகாதாரப் பணியாளர்கள் குறித்த தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ருவாண்டா பயோமெடிக்கல் சென்டர் தடுப்பூசி ஏற்றுமதியை மதிப்பாய்வு செய்ததாக சுகாதார அமைச்சர் சபின் நசன்சிமானா தெரிவித்துள்ளார்.
Marburg க்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது சிகிச்சை எதுவும் இல்லை என்ற நிலையில் புதிய தடுப்பூசிகள் குறித்த ஆய்வு அவசியமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.