மன்னர் 3ம் சார்லஸின் அதிகாரப்பூர்வ சிறப்பு நாணயம் வெளீயிடு
பிரித்தானியாவில் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டை குறிக்கும் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது.
பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார்.இதனைத் தொடர்ந்து அவரது மூத்த மகனான இளவரசர் சார்லஸ் மன்னராக அரியனை ஏறினார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார்.
மன்னர் சார்லஸின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா கடந்த மே மாதம் 6ம் திகதி பிரித்தானிய தலைநகர் லண்டனில் கோலாகலமாக நடந்தது.இந்த நிலையில் மன்னர் சார்லஸின் முடிசூட்டை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயத்தை, பிரித்தானிய நாணயங்களை அதிகாரப்பூர்வமாக தயாரிக்கும் ‘தி ராயல் மின்ட்’ நிறுவனம் நேற்று வெளியிட்டது.இந்த நாணயம் உடனடியாக புழக்கத்துக்கு வரும் என ‘தி ராயல் மின்ட்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.