பாரிஸில் நிறுத்தப்பட்ட வாகனம் ஒன்றை சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி

பிரான்ஸ் தலைநகரம் பாரிஸில் வாகனம் ஒன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வயது குறிப்பிடப்படாத ஆண் ஒருவரது சடலம் வாகனம் ஒன்றுக்குள் இருந்ததாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர்.
தலையில் குண்டு துளைத்த நிலையில், இறந்து கிடந்த ஆணின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்தனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
(Visited 32 times, 1 visits today)