ஒருநாள் தொடர் – இந்திய அணிக்கு 338 ஓட்டங்கள் இலக்கு
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி இந்தூரில்(Indore) நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.
அந்தவகையில், முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ஓட்டங்கள் குவித்தது.
நியூசிலாந்து அணி சார்பில் டேரில் மிட்செல்(Daryl Mitchell) 137 ஓட்டங்களும் கிளென் பிலிப்ஸ்(Glenn Phillips) 106 ஓட்டங்களும் பெற்றனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஹர்ஷித் ராணா(Harshit Rana) மற்றும் அர்ஷிதீப் சிங்(Arshdeep Singh) தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.





