ஒருநாள் தொடர் – முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், இன்று ஆரம்பமான ஒருநாள் தொடரின் முதல் போட்டி வதோதராவில்(Vadodara) நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்கள் குவித்தது.
நியூசிலாந்து அணி சார்பில் டேரில் மிச்சேல்(Daryl Mitchell) 84 ஓட்டங்கள் பெற்றார்.
இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ஓட்டங்கள் குவித்தது.
இந்திய அணி சார்பில் விராட் கோலி(Virat Kohli) 93 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது.





