இலங்கை செய்தி

ரவிகரன் எம்.பி. நெடுங்கேணி வைத்தியசாலைக்கு கண்காணிப்பு பயணம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் Durairasa Ravikaran , வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிலுள்ள நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு இன்று (26) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார்.

வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் நலன்புரிச்சங்கத்தினர், பிரதேசசபை உறுப்பினர்களான இ.கிரிதரன், பொ.தேவராஜா உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

அத்துடன், வைத்தியசாலையில் காணப்படும் மிகவும் முக்கியமான பௌதீகவளப் குறைபாடொன்றைச் சீர்செய்வது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையொன்றை தம்மிடம் கைளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இம்முறை தமக்கு குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து வைத்தியசாலைக் குறைபாடொன்றை தீர்த்துவைப்பது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!