இன்னும் 02,03 நாட்களில் O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்!
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பரீட்சை பெறுபேறுகள் வெளியாகுவதில் காலதாமதம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
(Visited 10 times, 1 visits today)





