சீனாவில் தீ விபத்து – 20 பேர் உயிரிழப்பு

சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
நேற்று இரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மேலும் பலர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
(Visited 25 times, 1 visits today)