2,000ஐ தாண்டிய உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேசிய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 2,000 ஐத் தாண்டியுள்ளது.
மார்ச் 20, 2025 முதல் தேசிய தேர்தல் புகார்கள் மையம் மற்றும் மாவட்ட தேர்தல் புகார்கள் மையத்தில் மொத்தம் 2,011 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 20 ஆம் தேதி, தேர்தல் சட்டங்களை மீறியதாக 130 சம்பவங்களும், தேர்தல் தொடர்பான ஏழு புகார்களும் பதிவாகியுள்ளதாக ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.
2025 உள்ளாட்சித் தேர்தல் மே 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.
(Visited 2 times, 2 visits today)