நுகேகொடை கூட்டம்: ரவிக்கு கதவடைப்பு?
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்குமாறு தமக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் புதிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனம் ஊடாக ரவி கருணாநாயக்க நாடாளுமன்றம் வந்தார்.
குறித்த கட்சியின் உரித்து ரவி கருணாநாயக்க வசம் இருப்பதால் இரு தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஒன்றை தனதாக்கிக்கொண்டார். இதனால் அவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் உள்ளக மோதல் ஏற்பட்டது.
எனினும், ரவி கருணாநாயக்க தன்னை இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராகவே அடையாளப்படுத்திவருகின்றார். ஆனால் கட்சிக்குள் உள்ள சிலர் தனக்கு எதிராக சதி செய்வதாகவும், உள்ளக கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகேகொடை கூட்டத்துக்கு என்னை அழைக்காவிட்டாலும், எதிரணிகள் செல்ல வேண்டும் எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.





