செய்தி

அணு ஆயுதங்களை மனிதர்கள் கட்டுப்படுத்த வேண்டும், AI அல்ல ; அமெரிக்கா-சீனா இணக்கம்

அணுவாயுதப் பயன்பாடு குறித்த முடிவுகளை மனித இனமே எடுக்க வேண்டும் என்றும் ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவுக்கு அதில் இடமில்லை என்றும் அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டு உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.

அது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அணுவாயுதப் பயன்பாடு தொடர்பான முடிவுகளை மனித இனத்தின் கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய அவசியத்தை இரு தலைவர்களும் மறுஉறுதிப்படுத்தினர்,” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

“அதேநேரம், ராணுவத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை விவேகமான முறையிலும் பொறுப்புடனும் வளர்ப்பது பற்றியும் அதில் உள்ள ஆபத்துகள் பற்றியும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டிய அவசியத்தையும் அவ்விரு தலைவர்களும் வலியுறுத்தினர்,” என்றது அறிக்கை.வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள விவரங்கள் குறித்து கருத்துக் கேட்டதற்கு சீன வெளியுறவு அமைச்சு உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

அணுவாயுத விவகாரம் தொடர்பாக மேலும் பேச்சுகள் அல்லது நடவடிக்கைகள் இடம்பெற அந்த அறிக்கை வழிவகுக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.இருப்பினும், இதுவரை இரு நாடுகளுக்கும் இடையில் பட்டும் படாமலும் இருந்துவந்த அணுவாயுதம், செயற்கை நுண்ணறிவு ஆகிய இரு பிரச்சினைகள் குறித்து முதல்முறை விவாதிக்கப்பட்டு உள்ளது.

அணுவாயுதப் பேச்சுக்கான நீண்டகாலத் தடையை விலக்கி வெளியே வருமாறு சீனாவை அமெரிக்கா பல மாதங்களாக வற்புறுத்தி வந்தது.

அமெரிக்காவும் சீனாவும் அணுவாயுதம் தொடர்பான அதிகாரத்துவப் பேச்சுகளை நவம்பர் மாதம் சிறிய அளவில் மீண்டும் தொடங்கின.இருப்பினும், இந்த விவகாரத்தில் சீனாவின் பொறுப்புணர்வு குறித்து உயர்மட்ட அமெரிக்க அதிகாரி ஒருவர் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்த பின்னர் பேச்சுவார்த்தை முடங்கியது.

அணுவாயுதக் குவிப்பில் சீனா வேகமாக ஈடுபட்டு வருவது பற்றி அமெரிக்கா கவலை தெரிவித்து வரும் நிலையில், முறையான அணுவாயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறலாம் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி