வேகமாகப் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸ்
அவுஸ்ரேலியாவின் தெற்கு நியூ சவுத் வேல்ஸின் (NSW) ரிவரினா பகுதியில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) வைரஸ் பரவும் அபாயம் குறித்து சுகாதார அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சென்டினல் கோழிகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து, கொசுக்களால் பரவும் இந்த நோயானது கடுமையான தலைவலி, வலிப்பு மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குறிப்பிட்ட சிகிச்சை இல்லை என்றாலும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இலவச தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
எனவே, மக்கள் நீண்ட ஆடைகளை அணியுமாறும், வீட்டைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.





