அரசியல் இலங்கை செய்தி

கொழும்பு மாநகர சபையில் என்.பி.பி.க்கு தோல்வி: அடுத்து என்ன?

கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் அடுத்த முறை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்றது.

இதன்போது கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் கேள்விகள் எழுப்பட்டன.

இவற்றுக்கு பதிலளித்த அமைச்சர் கூறியவை வருமாறு,

கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அதனை மீண்டும் முன்வைக்க முடியும்.

அந்தவகையில் விரைவில் பாதீடு முன்வைக்கப்படும். அதனை நிறைவேற்றுவதற்கு எதிரணி ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.”- என்றார்.

அதேவேளை, கொழும்பு மாநகரசபையை இனி கூட்டு எதிரணிதான் ஆளும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!