இனி தொலைபேசி இலக்கம் இல்லாமல் Whatsapp Chat செய்யலாம்
வாட்ஸ்அப்பில் மெசேஜ்ஜை பாதியில் டைப் செய்துவிட்டு அதை சில நேரங்களில் குறிப்பிட்ட நபருக்கு அனுப்ப மறந்துவிடுவோம்.
வாட்ஸ்அப்பில் இருந்து வெளியே வந்துவிட்டு திரும்ப சென்று பார்க்கும்போது பாதியில் டைப் செய்திருந்த மெசேஜ் காணாமல் போயிருக்கும்.
இதனால் அனுப்பப்படவேண்டிய முக்கியமான செய்தி மறந்ததோடு, அதனை மீண்டும் டைப் செய்து அனுப்புவதால் நேரமும் வீணாகும்.
இதுபோன்று அனுப்பப்படாத செய்திகளை பயனர்கள் எளிதாக நிர்வகிக்க உதவும் வகையில் மெசேஜ் டிராஃப்ட்ஸ் என்ற புதிய அம்சத்தை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பயனர்கள் தாங்கள் டைப் செய்ய தொடங்கிய ஆனால் அனுப்ப மறந்த செய்திகளை எளிதாக கண்டுபிடித்து அதனை முறையாக முடிக்க உதவுகிறது.
இந்த அப்டேட் பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அரைகுறையாக எழுதப்பட்ட செய்திகளைத் தேடும் தொந்தரவைக் குறைக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் ஒரு செய்தியை டைப் செய்யத் தொடங்கி அதை முழுமையடையாமல் விட்டுவிட்டால், வாட்ஸ்அப் இப்போது அதை “டிராஃப்ட்” என்கிற லேபிளுடன் காட்டும். இந்த டிராஃப்ட் தானாகவே உங்கள் chat list-ன் டாப்பில் இருக்கும்.
எனவே நீங்கள் கவனக்குறைவாக அல்லது வேறு வேலையில் பிஸி ஆகிவிட்டு வாட்ஸப் வந்தபிறகு, நீங்கள் பாதியில் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் அந்த மெசேஜ்ஜை அனுப்பலாம். முக்கியமான செய்தியை தற்செயலாக மறந்துவிட்டாலும் இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த அம்சத்தை உலகளவில் iOS மற்றும் Android இரண்டிலும் உள்ள அனைத்து பயனர்களுக்கும் WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது. WhatsApp-ன் சமீபத்திய அப்டேட்டை செய்த பிறகு Message Drafts அம்சத்தை உங்களால் பயன்படுத்த முடியும்.
Message Drafts அப்டேட் மட்டும் இல்லாமல், பயனர்களின் privacy சார்ந்த பிற அப்டேட்களையும் WhatsApp அறிமுகப்படுத்தவுள்ளது.
இதன்மூலமாக பயனர்கள் தொலைபேசி எண்களுக்குப் பதிலாக பயனர் பெயர்களைப் பயன்படுத்தி (user name) பிறருடன் whatsapp-ல் இணைய முடியும். பயனர்கள் தங்களது தனிப்பட்ட தனிப்பட்ட தொலைபேசி எண்களைப் பகிராமல் chat செய்ய முடியும் என்பதால் இது கூடுதல் பாதுகாப்பாக இருக்கும்.
அதே நேரத்தில் WhatsApp அதன் contact management tools-ஐ விரிவுபடுத்துகிறது. குறிப்பாக WhatsApp Webல் இது நடைமுறைக்கு வருகிறது.
இதனால் பயனர்கள் தங்கள் கணினியிலிருந்து நேரடியாக தொடர்புகளை சேர்க்கவும் நிர்வகிக்கவும் முடியும். அதோடு விருப்பத்திற்கேற்ப வேலை மற்றும் தனிப்பட்ட தொடர்புகளை தனித்தனியாக வைத்திருக்க முடியும்.