பிரான்ஸில் நோர்து-டேம் தேவாலய திறப்பு விழா – பங்கேற்பை உறுதி செய்த ட்ரம்ப்!
பிரான்ஸின் நோர்து-டேம் தேவாலயத்தின் திறப்புவிழாவில் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்வார் என உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொற்பேற்க உள்ள ட்ரம்ப், தேவாலயத்தின் திறப்புவிழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் வருவாரா இல்லையா என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் இல்லாத நிலையில், அவரது வருகையை உறுதிப்படுத்தினார்.
“ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பேரழிவுகரமான தீவிபத்திற்குப் பிறகு முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட அற்புதமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நோட்ரே டேம் பேராலயத்தின் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக நான் பிரான்ஸின் பரிஸுக்குச் செல்வேன் என்பதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.” என டிரம்பம் குறிப்பிட்டார்.
டிசம்பர் 7 ஆம் திகதி இடம்பெற உள்ள இந்த நோர்து-டேம் தேவாலயத்தின் திறப்பு விழாவுக்கு 50 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தலைவர்கள் வருகை தர உள்ளனர். ஜில் பைடன் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளதை இரு நாட்களுக்கு முன்பாக உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.