இலங்கை: எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது 12.5 கிலோகிராம் எல்பி எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
தற்போது ரூ.4,115 ஆக உள்ள 12.5 கிலோகிராம் எடையுள்ள எல்.பி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.4,000க்கு கீழ் கொண்டு வரப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
குறைக்கப்படும் விலைகள் தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் எனவும் குறைக்கப்பட்ட விலை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
(Visited 25 times, 1 visits today)





