இலங்கையில் பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் பேருந்து பயணக் கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், கட்டணங்களை குறைக்க முடியாதென குறிப்பிடப்படுகின்றது.
பேருந்து பயணக் கட்டண தேசிய கொள்கைகளுக்கு அமைய, 4 சதவீதமான எரிபொருள் குறைப்புக்கு மாத்திரமே கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், நேற்றைய தினம் டீசல் விலை 2.5 சதவீதமே குறைக்கப்பட்டுள்ளதால், பேருந்து பயணக் கட்டணங்களை குறைக்க முடியாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
(Visited 45 times, 1 visits today)