இலங்கை

முச்சக்கர வண்டிகளின் கட்டணம் குறித்த அறிவிப்பு!

எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், முச்சக்கரவண்டிகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமான என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் ஊடாக பிரத்தியேகமாக ஒழுங்குபடுத்தப்படும் வரை கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என முச்சக்கரவண்டி சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலைகள் திருத்தப்படுவதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியாது என முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நேற்றிரவு (31) மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் திருத்தத்துடன், ஒக்டேன் 92 லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதுடன், அதன் புதிய விலை 348 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 375 ரூபாவாகும் என இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!