பிரான்ஸில் எந்த ஒரு அகதிக்கும் அனுமதியில்லை என அறிவிப்பு
இத்தாலியின் லம்பெதுசாவில் வந்திறங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான அகதிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பொறுப்பேற்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் சுமையைக் குறைக்கவேண்டும் என்றும் ஐரோப்பிய ஆயைத்தின் தலைவர் உர்சுலா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் செவ்வியளித்த பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளரும் தேசியவாதியுமான எரிக் செமூர்
நான் ஜனாதிபதியானால் ஒரு அகதியையும் இத்தாலியில் இருந்து பிரான்சிற்குள் நுழைய விடமாட்டேன். நாட்டிற்குள் அவர்களை ஊடுருவ விடமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
தீவிர வலதுசாரியான எரிக் செமூர் ஜனாதிபதி வேட்பாளராக் நின்ற சமயம் தனது தேர்தற் பிரச்சாரத்திலும் அகதிகள் மற்றும் குடியேற்றவாதிகள் மீது கடுமையான விமர்சனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.
(Visited 53 times, 1 visits today)