தனிப்பட்ட ரீதியில் எல்லோருக்கும் என்னைப் பிடிப்பதில்லை – ரணில்!
அரசியல் வட்டாரத்தில் பலருக்கு தனிப்பட்ட முறையில் தம்மைப் பிடிக்கவில்லை என்பதை தாம் அறிவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு கிங்ஸ்பரியில் நடைபெற்ற இலங்கையின் தொழில்சார் சங்கங்களின் அமைப்பின் (OPA) 36வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்டிருந்த அவர், “எல்லா விமர்சனங்களையும் மீறி நான் வேலையை ஏற்றுக்கொண்டேன். பின்னர் பொருளாதாரத்தை மிக வேகமாக மாற்றுவதற்கான வாய்ப்பு இருந்தது. ”
அரசியல் அமைப்பில் உள்ள அனைவருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும், அவர்கள் என்னை விரும்புவதில்லை என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.





