உக்ரைனுக்கு ஆயுத விற்பனையை அங்கீகரித்த நார்வே
ரஷ்யாவுடனான போர் இரண்டு ஆண்டுகளை நெருங்கியுள்ள நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்களை நேரடியாக விற்பனை செய்ய அங்கீகாரம் வழங்குவதாக நோர்வே அரசு அறிவித்துள்ளது.
“ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரின் விளைவாக அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையில், நாங்கள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது முக்கியம்” என்று நார்வேயின் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போர் நீடிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை நாம் திட்டமிட வேண்டும். எனவே, நார்வே பாதுகாப்பு துறையில் இருந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தயாரிப்புகளை நேரடியாக விற்பனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றார்.
(Visited 12 times, 1 visits today)