இலங்கை செய்தி

உண்மையான பயனாளிகளைத் தெரிவு செய்ய வடக்கு ஆளுநர் அதிகாரிகளுக்குக் கடும் உத்தரவு

அரசாங்கத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டுமாயின், பிரதேச மற்றும் மாவட்டச் செயலகங்களுடன் இணைந்து சரியான பயனாளிகளைத் தெரிவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகள் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் இன்று மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தின் போது, புதிய கட்டடங்கள் மற்றும் இயந்திரங்களுக்காக நிதி கோரப்பட்டதை அவதானித்த ஆளுநர், “ஏற்கனவே பல இடங்களில் அரச நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள் பாவனையற்று உள்ளன. அவற்றை விடுத்துப் புதிய கட்டடங்களுக்கு நிதி செலவிடுவதைத் தவிருங்கள். முடங்கிக் கிடக்கும் இயந்திரங்களைப் புனரமைத்துப் பயன்படுத்துங்கள்” என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான திட்டமிடப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் குறித்த விபரங்கள் வருமாறு:

சமூக சேவைகள் திணைக்களம்: 226 மில்லியன் ரூபா.

தொழிற்துறைத் திணைக்களம்: 151 மில்லியன் ரூபா.

கூட்டுறவுத் திணைக்களம்: 23 மில்லியன் ரூபா

இந்த நிதி ஒதுக்கீடுகள் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர் உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!