வடகொரியாவின் உளவுச் செய்மதி கடலில் வீழ்ந்தது!

வட கொரியா இன்று விண்வெளிக்கு அனுப்ப முயன்ற உளவுச் செய்மதி கடலில் வீழ்ந்துள்ளது.
வட கொரியாவின் விண்வெளி முகவரகம் இது தொடர்பாக விடுத்த அறிக்கையொன்றில், இராணுவக் கண்காணிப்பு செய்மதியான மலிகயோங் 1 எனும் செய்மதியை சோலிமா-1 என்ற ரொக்கெட் மூல் ஏவியுள்ளது.
எனினும் இரண்டாவது கட்டத்தின் என்ஜினின் அசாதாரண ஆரம்பம் காரணமாக இந்த ரொக்கெட் கடலில் வீழ்ந்ததாக அம்முகவரகம் தெரிவித்தள்ளது.
மேற்படி ரொக்கெட் பாகங்கள் சிலவற்றை தென் கொரியா கைப்பற்றியுள்ளது.
வட கொரியாவின் ஏவுகணை சோதனை முயற்சிகள் ஐநா பாதுகாப்புச் சபையின் தீர்மானத்துக்கு முரணானதாகும்.
(Visited 13 times, 1 visits today)