ரஷ்யாவிற்காக உயிர் தியாகம் செய்த வடகொரிய வீரர்கள் : மேலும் வீரர்களை அனுப்பும் கிம்!
உக்ரைனில் நடந்த சண்டையில் 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதை அடுத்து, வடகொரியா ரஷ்யாவிற்கு மேலும் படைகள் மற்றும் கமிகேஸ் ட்ரோன்களை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜங்-உன் விளாடிமிர் புடினின் போர் முயற்சிகளுக்கு உதவ வட கொரியர்களை அனுப்பத் தொடங்கியதிலிருந்து, அவர்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளனர்.
குர்ஸ்க் பகுதியில் மூன்று நாட்களில் 77 பேர் கொல்லப்பட்டதாகவும், 40 வட கொரிய வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிம் ஜாங்-உன்னின் படைகள் மீது உக்ரேனிய சிறப்பு நடவடிக்கைக் குழு ரஷ்யாவிற்குள் ஒரு களத்தில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் கிராஃபிக் காட்சிகளும் வெளியாக்கியுள்ளன.
சுமார் 100 வட கொரியர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 1,000 பேர் காயமடைந்ததாகவும் தற்போது நம்பப்படும் நிலையில், தென் கொரிய உளவுத்துறை மேலும் ராணுவ வீரர்கள் அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளது.