தனது அரசியல் வாரிசை நியமிக்க தயாராகும் வடகொரிய ஜனாதிபதி கிம்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், தனது மகள் மிக் ஜு ஏ-வை தனது அரசியல் வாரிசாக நியமிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தென்கொரிய நாடாளுமன்ற புலனாய்வுக் குழுவைச் சேர்ந்த லீ சியோங்-க்யூன் இத்தகவலை வெளியிட்டனர் என உளவுத்துறை தகவலை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
தந்தையின் வெளிநாட்டுப் பயணங்களில் மிக் ஜு ஏ தவறாமல் பங்கேற்று வருவது அதை உறுதிப்படுத்துவதாக தென்கொரிய அதிகாரி தெரிவித்தார்.
சீனாவுக்கான அரசுமுறைப் பயணம் முடிந்து நாடு திரும்பிய கிம் ஜோங் உன் தனது முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தந்தை, மகள் இருவரும் மிக உயரிய பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பது, அவர்களுடைய உயிரியல் தகவல்கள் வெளியே கசியாமல் அதிகாரிகள் பார்த்துக்கொள்வது, சிறப்பு விமானத்தைப் பயன்படுத்துவது எல்லாமே அதற்கான நடவடிக்கைதான் என கூறப்படுகிறது.