தென்கொரியாவுக்கு 150 பலூன்களில் குப்பைகளை அனுப்பிய வடகொரியா!
வட கொரியா, தென் கொரியாவின் மீது 150 க்கும் மேற்பட்ட பலூன்களில் குப்பைகளை வீசியுள்ளது.
போரினால் பிளவுபட்ட இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றங்களில் மற்றுமொரு அடையாளமாக வடகொரியாவின் நடவடிக்கை அமைந்துள்ளது.
தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள், செவ்வாய்க்கிழமை இரவு முதல் நாட்டிற்குள் குப்பைகளை எடுத்துச் செல்லும் பெரும் எண்ணிக்கையிலான பலூன்களை வட கொரியா பறக்கவிட்டதாகக் கூறினார்.
இது, பியாங்யாங் எதிர்ப்பு பிரச்சார துண்டுப் பிரசுரங்களை எல்லையில் பறக்கவிட்ட தென் கொரிய ஆர்வலர்களுக்கு எதிரான வெளிப்படையான பதிலடடியாகும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட வட கொரிய பலூன்கள் கைவிடப்பட்டதாகவும், இராணுவ வீரர்கள் துரித கதியில் செயற்பட்ட குறித்த பலூன்களை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வடகொரியாவில் இருந்து பறக்கும் பொருட்களை பொதுமக்கள் தொட வேண்டாம் என்றும், கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ராணுவத்திடமோ அல்லது காவல்துறையினரிடமோ தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.