அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த வடகொரியா : பல பால்ஸ்டிக் ஏவுகணைகள் சோதனை!

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதில் அளிக்கும் விதமாக வடகொரியா பல பால்ஸ்டிக் ஏவுகணைகளை இன்று (10.3) சோதனை செய்துள்ளது.
அடையாளம் தெரியாத” ஏவுகணைகள், வடக்கின் ஹ்வாங்ஹே மாகாணத்தில் இருந்து மதியம் 1:50 மணியளவில் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் கொரிய இராணுவம் “அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் கண்காணிப்பு மற்றும் தயார் நிலைகளை அதிகப்படுத்தியுள்ள நிலையில் இந்த ஏவுகணை சோதனை வந்துள்ளது.
தென்காரியா மற்றும் அமெரிக்கா இடையில் நடைபெறும் ஃப்ரீடம் ஷீல்ட்” என்று அழைக்கப்படும் போர் பயிர்ச்சி கள் வரும் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
(Visited 2 times, 2 visits today)