எந்நேரத்திலும் போருக்கு தயாராக இருக்கும் வடகொரியா!
வடகொரியா எந்த நேரத்திலும் போருக்குத் தயாராக இருப்பதைப் பிரதிபலிக்கும் வகையில், அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன், தனது பீரங்கிகளின் துப்பாக்கிச் சூடு பயிற்சிக்கு தலைமை தாங்கினார்.
தென் கொரிய எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கடற்படை எதிரியின் தலைநகர் மீது தாக்குதல் நடத்துவது எப்படி என்பதை பரிசோதித்ததாக வட கொரியாவின் அரசு செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 10 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தென்கொரியாவின் தலைநகரான சியோலை தாக்குவதற்கு தேவையான சக்தியை சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு முக்கியமான இராணுவ ஒத்திகையை நிறைவேற்ற முடிந்ததாகவும், அது தனது ராணுவ பலத்தை வெளிப்படுத்துவதாகவும் வடகொரிய அரசு செய்தி சேவை தெரிவித்துள்ளது.
எனினும், வடகொரியா தென்கொரியாவை தாக்கவில்லை மாறாக மஞ்சள் கடல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த ஒத்திகை நேற்று (07.03) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெற்றதாக தென்கொரிய கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டு கடற்படை பயிற்சியின் போது வடகொரியா பீரங்கி துப்பாக்கிச் சூடு ஒத்திகையை நடத்தியது.
கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான வருடாந்த யுத்த பயிற்சியில் கடந்த வருடத்தை விட அதிகளவான படையினர் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
நேற்றைய ஒத்திகை வடகொரியா உண்மையான போரை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதைக் காட்டுவதாக வடகொரியாவின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் வடகொரியா தனது தலைநகரை குறிவைத்து ஆத்திரமூட்டும் பயிற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.