மிகப் பெரிய சுற்றுலா மண்டலத்தை திறந்துள்ள வடகொரியா : தொடரும் சுற்றுலா பயணிகளுக்கான தடை!

வட கொரியா தனது குடிமக்களுக்காக வொன்சன்-கல்மா கிழக்கு கடலோர சுற்றுலா மண்டலம் என்ற ஒரு பெரிய புதிய கடற்கரை ரிசார்ட்டைத் திறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதே நேரத்தில் நாடு பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுலா மீதான கடுமையான தடையை பராமரிக்கிறது.
கிட்டத்தட்ட 20,000 பேரை தங்க வைக்க முடியும் என்று கூறும் இந்த பிரம்மாண்டமான வளாகம், சுற்றுலா மூலம் நாட்டின் போராடும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான உத்தியாக பார்க்கப்படுகிறது.
வட கொரியாவின் மிகப்பெரிய சுற்றுலா வளாகமாகப் பேசப்படும் இந்த ரிசார்ட்டில், திறந்தவெளி நீச்சல், நீர் பூங்கா சறுக்குகள் மற்றும் பல்வேறு நீர்வாழ் நடவடிக்கைகளுக்கான வசதிகள் உள்ளன.
இருப்பினும், வொன்சன்-கல்மா மண்டலத்திற்கான வாய்ப்புகள் நிச்சயமற்றதாகவே உள்ளன.
நாடு அதன் எல்லைகளை முழுமையாக மீண்டும் திறக்கவோ அல்லது மேற்கத்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றுக்கொள்ளவோ வாய்ப்பில்லை என்பதால், சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அதன் முழு திறனையும் உணர முடியாது என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.