கிழக்கு கடற்பகுதியில் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா!
வடகொரியா தனது நாட்டின் கிழக்கு கடற்பகுதியில் பால்ஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர், எவ்வளவு தூரம் குறித்த ஏவுகணை சென்றது போன்ற விவரங்களை வெளியிடவில்லை.
தென் கொரியாவுடனான பதட்டமான கடல் எல்லைக்கு அருகே வட கொரியா பீரங்கி குண்டுகளை சரமாரியாகச் சுட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது.
டிசம்பரின் பிற்பகுதியில் நடந்த ஒரு முக்கிய ஆளும் கட்சி கூட்டத்தில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் அணு ஆயுதங்களை விரிவுபடுத்துவதாகவும், அமெரிக்க தலைமையிலான மோதல் நகர்வுகளை சமாளிக்க கூடுதல் உளவு செயற்கைக்கோள்களை ஏவுவதாகவும் உறுதியளித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)