மீண்டும் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா!
வட கொரியா நாட்டின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஒரு பெரிய இராணுவ கப்பல் கட்டும் தளத்திற்கு அருகே பல கப்பல் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நடவடிக்கையானது அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றுடன் பதற்றங்களை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் கொரியா மற்றும் ஜப்பானில் ஏவுகணை பாதுகாப்பு மற்றும் குவாம் உட்பட பசிபிக் பகுதியில் உள்ள தொலைதூர அமெரிக்க இலக்குகளை முறியடிப்பதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் முயற்சிகளையே இந்த சோதனைகள் பிரதிபலிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள், வட கொரியாவின் சின்போ துறைமுகத்திற்கு அருகே ஏவுகணைகள் நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட முக்கிய கடற்படைக் கப்பல்களைக் கட்டும் ஒரு பெரிய கப்பல் கட்டும் தளத்தைக் கண்டறிந்ததாகக் கூறினர்.
ஏவுகணைகளின் எண்ணிக்கை, அவை எவ்வளவு தூரம் பறந்தன மற்றும் அவை நிலம் அல்லது கடற்படை சொத்துக்களிலிருந்து ஏவப்பட்டதா என்பது உள்ளிட்ட குறிப்பிட்ட ஏவுகணை விவரங்களை தெற்கின் தென்கொரியஇராணுவம் உடனடியாக வழங்கவில்லை.