வட அமெரிக்கா

அமெரிக்காவில் வீட்டின் படுக்கையறை சுவரை சோதனையிட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

அமெரிக்காவின் North Carolina மாநிலத்தில் உள்ள வீடொன்றின் படுக்கையறைச் சுவரில் 65,000 தேனீக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீட்டில் வசிக்கும் 3 வயதுச் சிறுமி, தனது படுக்கையறைச் சுவரில் அரக்கர்கள் இருப்பதாகப் பெற்றோரிடம் கூறிவந்தார்.

பிரபல “Monsters, Inc” படத்தை குறித்த சிறுமி பார்த்ததால், அவர் அரக்கர்களை நினைத்து அஞ்சுகிறார் என்று அவரின் பெற்றோர் நினைத்துள்ளனர்.

அவர்கள் தங்கியிருக்கும் வீடு சுமார் 100 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது. வீட்டுக்கு வெளியே தேனீக்கள் கொத்தாகப் பறப்பதைக் கண்டபோது அந்தச் சத்தத்தைக் கேட்டுத்தான் சேய்லர் பயப்படுகிறார் என்று அவரின் தாயார் சந்தேகப்பட்டார்.

தேனீக்களை வளர்ப்பவரின் உதவியோடு அவர்கள் சேய்லரின் படுக்கையறைச் சுவர்களில் சுமார் 65,000 தேனீக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

45 கிலோகிராம் எடைகொண்ட தேன்கூடும் சுவரில் இருந்ததாக தெரியவந்துள்ளது. தேன்கூட்டைக் கட்டத் தேனீக்கள் சுமார் 8 மாதங்கள் எடுத்ததாக நம்பப்படுகிறது.

வீட்டின் மின்சாரக் கட்டமைப்பை அவை சேதப்படுத்தின. வீட்டில் இருந்து மீட்கப்பட்டத் தேனீக்கள் சரணாலயத்திற்கு மாற்றப்பட்டன.

(Visited 34 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்