நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு : ஐ.நா விசாரணையை கோரும் மொஸ்கோ!
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு குறித்து விசாரணை செய்ய ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை ஜூலை 11 அன்று கூட்டுமாறு ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த ரஷ்ய அதிகாரி, டிமிட்ரி பாலியன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கூட்டத்திற்கு “சுவாரஸ்யமான ஓரிரு பாரபட்சமற்ற பேச்சாளர்களை” ரஷ்யா அழைக்கும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக இந்த வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை செய்வதில், ஸ்வீடன் மற்றும் பிற நாடுகளை அணுகுவதில் ரஷ்யா தோல்வியடைந்தது.
ஸ்வீடன் மற்றும் டென்மார்க்கின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களில் குழாய் வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் மேற்குலக நாடுகள் இருப்பதாக மாஸ்கோ கூறி வருகின்றது.
(Visited 8 times, 1 visits today)