இந்தியா செய்தி

ராகுல் காந்திக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிப்பு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் வயநாடு காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு எதிராக ஜார்க்கண்டில் உள்ள நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.

ஜூன் 26 ஆம் தேதி ராகுல் காந்தி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ராகுல் காந்தியின் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு பாஜகவில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

அதாவது 2003 குஜராத் கலவரத்தின் பின்னணியில், “கொலை வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒருவர் கூட பாஜகவின் தலைவராக முடியும்” என்று ராகுல் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

எனவே ராகுல் காந்தி மீது பாஜக தலைவர் பிரதாப் கட்டியார் தாக்கல் செய்த மனு விசாரகிக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே பலமுறை சம்மன் அனுப்பியும் ராகுல் காந்தி ஆஜராகவில்லை.

இந்நிலையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய ராகுலின் மனுவையும் சாய்பாசா நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து, ஜூன் 26 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி