Site icon Tamil News

பணியாளர்களை குறைக்கும் நோக்கியா நிறுவனம் : வேலையை இழக்கவுள்ள 14 ஆயிரம் பேர்!

ஃபின்னிஷ் தொலைத்தொடர்பு நிறுவனமான நோக்கியா  வட அமெரிக்காவில் 5G உபகரணங்களுக்கான தேவை குறைவதால்   14,000 வேலைவாய்ப்புகளை  குறைப்பதாக தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றுநோயிற்கு பிறகு மிகப்பெரிய அளவில் வணிக நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது நோக்கியாவும் சேர்ந்துள்ளது.

“மூன்றாம் காலாண்டில் மேக்ரோ பொருளாதார சவால்களிலிருந்து எங்கள் வணிகத்தில் அதிகரித்த தாக்கத்தை நாங்கள் கண்டோம்” என்று தலைமை நிர்வாக அதிகாரி பெக்கா லண்ட்மார்க் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நோக்கியாவின் சேமிப்புத் திட்டம் ஊழியர்களை 72,000 ஆகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 2026 ஆம் ஆண்டில் 1.2 பில்லியன் யூரோக்கள் ($1.14 பில்லியன்) வரை செலவைக் குறைக்கும் நடவடிக்கையில் ஒருபகுதியாக ஆட்குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

Exit mobile version