உலகம் செய்தி

நோபல் பரிசு வென்ற சீன இயற்பியலாளர் சென்-நிங் யாங் (Chen-Ning yang) காலமானார்

பிரபல சீன இயற்பியலாளரும் (physicist) நோபல் பரிசு பெற்றவருமான 103 வயதுடைய சென் நிங்-யாங் (Chen Ningyang) பெய்ஜிங்கில் (Beijing) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

சென் நிங் யாங், 1922ம் ஆண்டு கிழக்கு சீனாவின் அன்ஹுய் (Anhui) மாகாணத்தில் உள்ள ஹெஃபியில் (Hefei) பிறந்தார். 1940களில், அவர் கல்விப் படிப்பைத் தொடர அமெரிக்காவிற்குச் சென்று பின்னர் பல ஆசிரியர் பதவிகளை வகித்தார்.

1954ம் ஆண்டில், அவர் அமெரிக்க இயற்பியலாளர் ராபர்ட் மில்ஸுடன் (Robert Mills) இணைந்து சமன்பாடுகளின் தொகுப்பை எழுதியுள்ளார், இது ஐன்ஸ்டீனின் (Einstein) சார்பியல் கோட்பாட்டைப் போலவே இயற்பியலுக்கும் முக்கியமானது.

இதனை தொடர்ந்து, யாங் மற்றும் சக தத்துவார்த்த இயற்பியலாளர் லீ சுங்-டாவோ (Lee Chung-tao) ஆகியோருக்கு 1957ம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் 1957ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) நினைவு விருதைப் பெற்றார், மேலும் 1958ல் பிரின்ஸ்டன் (Princeton) பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டத்தையும் பெற்றார்.

மேலும், ஜிங் ஹுவா (Tsinghua) பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் ஜிங் ஹுவா பல்கலைக்கழக உயர்நிலை ஆய்வு நிறுவனத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி