2025ம் ஆண்டிற்கான நோபல் பரிசு தொகை

நோபல் பரிசுகள் என்பது 1901ம் ஆண்டு முதன்முதலில் நிறுவப்பட்ட சர்வதேச விருதுகளின் தொகுப்பாகும்.
இது ஒரு பணக்கார ஸ்வீடிஷ் வேதியியலாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆல்பிரட் நோபல் தனது உயிலில், மனிதகுலத்திற்கு மிகப்பெரிய நன்மையை வழங்கியவர்களை கௌரவிக்கும் பரிசுகளை உருவாக்க தனது செல்வத்தை அர்ப்பணித்தார்.
இந்த விருதுகள் இயற்பியல், வேதியியல் அல்லது மருத்துவம், இலக்கியம், அமைதி, பொருளாதார அறிவியல் ஆகிய ஆறு பிரிவுகளைக் கொண்டுள்ளன.
அந்தவகையில், 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்காக 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதில் 244 பெயர்கள் தனிநபர்கள் மற்றும் 94 பெயர்கள் நிறுவனங்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2025ம் ஆண்டிற்கான முழு பரிசுத் தொகை 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர்கள் ($1.17 million USD). இந்தப் பரிசுத் தொகை 2023 மற்றும் 2024ம் ஆண்டு முதல் மாற்றங்கள் இன்றி ஒரே மாதிரியாக அமைந்துள்ளது.