வெனிசுலா ஜனாதிபதியை பதவி விலக நோபல் பரிசுக் குழு தலைவர் அழைப்பு
நோர்வேயில்(Norway) நடைபெற்ற வெனிசுலா(Venezuela) நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவை(Maria Corina Machado)கௌரவிக்கும் விருது வழங்கும் விழாவில், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ(Nicolas Maduro) தனது 2024 தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்டு பதவி விலகுமாறு நோபல் பரிசுக் குழுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
“மதுரோ, தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு பதவி விலகுங்கள்” என்று தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னஸ்(Jørgen Vadne Fridnes) ஒரு உரையில் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஜனநாயகத்திற்கு அமைதியான மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைக்கவும். ஏனென்றால் அதுவே வெனிசுலா மக்களின் விருப்பம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தலைமறைவாக வசிக்கும் மச்சாடோ, ஒஸ்லோவில்(Oslo) நடந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை, அங்கு அவரது மகள் தனது சார்பாக அமைதிப் பரிசை ஏற்றுக்கொண்டார்.
தொடர்புடைய செய்தி
தாய் சார்பில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மரியா கொரினா மச்சாடோவின் மகள்





