மக்களை ஒடுக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் வேண்டாம்
மக்களை ஒடுக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் வேண்டாம், மாற்றுச் சட்டமும் வேண்டாம் என வலியுறுத்தி வலிகாமம் பிரதேச சபைக்கு முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கறுப்பு நிறத்திலான பதாகைகளை ஏந்தியவாறு பிரதேச சபை உறுப்பினர்கள் அமர்வுக்கு செல்ல முன்னர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஸ் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
.





