இலங்கை செய்தி

சர்வதேச விசாரணைக்கு இடமில்லை: நீதி அமைச்சர் திட்டவட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதை அரசாங்கம் எதிர்ப்பதாக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார Harshana Nanayakkara தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (20) சாணக்கியன் இராசமாணிக்கம் Chanakyan Rajamanickam எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ 2009-ஆம் ஆண்டுபோரின் இறுதிக் கட்டங்களில் சுமார் 2,764 பேர் காணாமல் போயுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை விவாதத்திற்குரியது.

காணாமல் போனவர்கள் குறித்த துல்லியமான தரவுகள் எதுவும் இல்லை.

போரின் போது இரு தரப்பினரும் பலவந்தமாக காணாமல் ஆக்குவதில் ஈடுபட்டுள்ளனர், எனினும் அரசாங்கம் அத்தகைய செயல்களை ஆதரிக்கவில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து எந்தவொரு அனைத்துலக அமைப்புகளும் விசாரிப்பதை அரசாங்கம் எதிர்க்கிறது என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட தகவலை ஏற்க முடியாது என சாணக்கியன் குறிப்பிட்டார்.

பொறுப்புக்கூறல் தொடர்பிலும், நீதியை வழங்குவதிலும் அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!